திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இளைஞர் ஒருவர் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் அதிக வெப்பம் தாங்காமல் நடுரோட்டிலேயே திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் டவுன் பூங்காவனத் தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விஷ்ணு ( 28 ). இவர், நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். உச்சிவெயில் மண்டையை பிளக்க அதையும் பொருட் படுத்தாமல் விஷ்ணு தனது வாகனத்தில் அதிகவேகமாக சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்து சென்ற போது வாகனத்தின் இன்ஜினில் இருந்து புகை வெளியானது.
இதை சட்டென கவனித்த விஷ்ணு, வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். இதில், பெட்ரோல் டேங்கில் இருந்து கசிந்த பெட்ரோல் சூடாக கொதித்த இன்ஜின் மீது விழுந்தவுடன் இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே, விஷ்ணு வாகனத்தை விட்டு தொலைவாக ஓடினார். இதற்கிடையே, இரு சக்கர வாகனம் மீது பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கி தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனே, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீப்பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அனைத்தனர். அரை மணி நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்படுத்தினாலும், இரு சக்கர வாகனம் எலும்பு கூடாக காட்சி யளித்தது. இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago