வாக்குப்பதிவால் அலங்கோலமான மாநகராட்சி பள்ளி: மழலை மொழியில் சுட்டிக்காட்டிய மாணவியின் வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் வாக்குப்பதிவால் மாநகராட்சி பள்ளி அலங்கோலமானதாக அப்பள்ளி மாணவி ஒருவர் மழலை மொழியில் சுட்டிக்காட்டி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்காக 3,726வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடி பணியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பல பள்ளி வளாகங்களில் போடப்பட்ட உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் குடிநீர் மற்றும்குளிர்பான பாட்டில்கள் அகற்றப்படாமல் இருந்தது. மேலும், தேர்தல் தொடர்பான விவரங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் பள்ளிசுவர்களில் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.

சென்னை முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியிலும் அதேநிலை நீடித்தது. அப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த அலமாரிஉடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும். வேட்பாளர்களின் விவரங்கள் ஒட்டப்பட்ட தாள்கள் பெயர்ந்து, பள்ளி சுவற்றில் இருந்த பெயின்ட் உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளன.

இது தொடர்பாக அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ‘‘எங்கள்பள்ளியை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? எங்கள் பள்ளியைநாங்களே ஒழுங்காக வைத்திருக்கிறோம். படித்த உங்களுக்கு, வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா?’’ என்று மழலை மொழியில் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘அடுத்த 3 நாட்களுக்குள்அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்