கிருஷ்ணகிரி அருகே திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு இல்லாத தரை கிணற்றால் விபத்து அபாயம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு இல்லாத தரைக் கிணற்றால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.

கிருஷ்ணகிரியிலிருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ( என்எச் 66 ) போக்கு வரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. குறிப்பாக இச்சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆன்மிக பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருவழிச்சாலையாக இருந்த இச்சாலை, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது இச்சாலை வழியாக தினசரி ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே, இச்சாலையில் வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சாலையோரம் பாதுகாப்பு இல்லாத தரைமட்ட கிணறு ஆபத்தான நிலையில் உள்ளது. இக்கிணறு சாலையோரம் தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்லும் நிலையுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது, சாலையோரங்களில் இருந்த கிணறுகள் மூடப்பட்டன. ஆனால், கிருஷ்ணகிரியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள வேட்டியம் பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள தரைமட்ட கிணறு பட்டா நிலத்தில் உள்ளதால், மூடவில்லை.

இதனால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டுநர்கள் வரை இச்சாலையைச் சிரமத்துடனும், அச்சத்துடனும் கடந்து செல்கிறோம். எனவே, பாதுகாப்பு இல்லாத இக்கிணற்றுக்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் அல்லது சாலையோரம் தடுப்பு அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்