ராமநாதபுரம்: மண்டபம் அருகே வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணின் 2 குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சாந்தி ( 38 ). இவர் நேற்று முன்தினம் மண்டபம் அருகே வேதாளை அரசு மேல் நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஊராட்சி சார்பில் பூத் சிலிப் கொடுக்கும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணிகளை முடித்துவிட்டு மாலை சாந்தி அதே வாக்குச் சாவடி மையத்தில் உள்ள மற்றொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்றார்.
அப்போது வாக்குச் சாவடியிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த சாந்திக்கு சஷ்டீஸ்வரி ( 12 ), பாவனா ( 10 ) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சாந்தியின் மாமியார் முருகம்மாள் ( 57 ) மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் ( பயிற்சி ) சிவானந்தத்திடம், 2 பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.
» காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்ட டிடி தொலைக்காட்சி லோகோ - மு.க.ஸ்டாலின் கண்டனம்
» “கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்” - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
இது குறித்து முருகம்மாள் கூறும்போது, எனது மருமகள் சாந்தி 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்து 2 பெண் குழந்தைகளையும், என்னையும் காப்பாற்றி வந்தார். தற்போது 2 பெண் குழந்தைகளும் தாய், தந்தையை இழந்து தவிக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago