ஏரியில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

சேலம் மூக்கனேரியில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில், சேலமே குரல் கொடு என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஊழியர் முருகேசன் என்பவர் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவில் உள்ள குட்டைக்குச் சென்றார்.

அப்போது, குட்டையில் வறண்டுகிடந்த ஒரு பகுதியில் ஒரு பொருள் மின்னியது. அது துப்பாக்கித் தோட்டா என்று தெரியவந்தது. அந்த இடத்தில் மேலும் 8 தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து 9 தோட்டாக்களும் கன்னங்குறிச்சி போலீஸில் ஒப்படைக்கப்பட்டன. தோட்டா கண்டெடுக்கப்பட்ட இடத்தில் காவல் துணை ஆணையர் பாபு, காவல் உதவி ஆணையர் முருகசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்தனர்.

கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் ஆயுதப் படைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டன. விசாரணையில், தோட்டாக்கள் 1968–ம் ஆண்டு தயாரிக்கப் பட்டவை என்றும் அது 7.62 எம் என்ற வகையைச் சேர்ந்தவை எனவும் தெரிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE