கர்நாடக தேர்தலை மையமாக வைத்தே காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலர் நக்மா தெரிவித்தார்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா புதுச்சேரி வந்துள்ளார். அவர் புதுவையில் 5 நாட்கள் தங்கியிருந்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்தை இன்று சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கட்சி விவகாரங்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் உள்ளிட்டவை குறித்துப் பேசினார்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நக்மார் கூறுகையில், ''புதுச்சேரியில் மகிளா காங்கிரஸ் பயிற்சி முகாம் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் தரமுடியுமோ அதனை காங்கிரஸ் கட்சி செய்து வருகின்றது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எவ்வித மதிப்பையும் அளிக்கவில்லை. கர்நாடக தேர்தலை மையமாக வைத்தே காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுகிறது'' என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago