சென்னை: தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதம், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது.
வாக்குப்பதிவு நிலவரம்: இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதம், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
வேலூர், சிதம்பரம் மக்களவை தொகுதிகளில் தலா 23.46 சதவீதம், மதுரையில் 22.35 சதவீதம், திருச்சியில் 22.77 சதவீதம், திருப்பூரில் 22 சதவீதம், கிருஷ்ணகிரியில் 23.97 சதவீதம், மயிலாடுதுறையில் 23.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், தேனியில் 25.75 சதவீதம், திண்டுக்கல்லில் 25.85 சதவீதம், திருவள்ளூர் 22.60 சதவீதம் வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளன.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.09 வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago