மேட்டூர்: அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார். பின்னர், நெடுங்குளம் ஊராட்சிக் குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: “முதல் தலைமுறை வாக்காளர்கள், வாக்காளர் பெருமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.
» “தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்” - ராமதாஸ் பேட்டி
» இந்தியாவுக்கு 18, புதுச்சேரிக்கு 15-வது மக்களவைத் தேர்தல்: சுவாரஸ்ய பின்னணி
முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் குமார், மருமகள் திவ்யா ஆகியோர் வாக்குப் பதிவு மையத்துக்கு நடந்து சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சேலத்தில் gஆலை 9 மணி நிலவரப்படி 14.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago