காரைக்குடி: 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும் " என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் ப.சிதம்பரம் வாக்களித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : எனது ஜனநாயக கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை நாங்கள் சீர் செய்து விடுவோம். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாரும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாஜக கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்துல் காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago