அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: 75 சதவீத தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தவில்லை என பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘‘மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவு செய்யவில்லை’’ என குற்றம்சாட்டி விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தயாநிதிமாறன் நேற்று முன்தினம் கூறும்போது, ‘‘அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேர்தல் நேரத்தில் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதில் துளியும் உண்மை இல்லை. எனவே பழனிசாமி எனக்கு எதிரான அவதூறு பேச்சுக்கு 24 மணி நேரத்தில் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்படும்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தயாநிதி மாறன், எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக நேற்று குற்றவியல் அவதூறு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 75 சதவீத தொகுதி மேம்பாட்டு நிதியை தொகுதிக்கு செலவழிக்கவில்லை என எனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளேன். என்னென்ன பணிகளைச் செய்துள்ளேன் என்பதையும் பட்டியலிட்டுள்ளேன். அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே அவரது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 24 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்தும், அவர் எந்த மன்னிப்பும் கோரவில்லை.

எனவே எந்த ஆதாரமும் இல்லாமல் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியுள்ளதால் தேர்தல் நேரத்தில் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பழனிசாமி மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு வரும் ஜூன் 14-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ‘‘தொகுதி மேம்பாட்டு நிதியில் இதுவரை 95 சதவீத தொகையை எனது தொகுதிக்காக நான் செலவிட்டுள்ளேன். எனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் தற்போது ரூ.17 லட்சம்தான் மிச்சம் உள்ளது. இந்த தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற விரக்தியில் பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளார். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும்’’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்