சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் 40 மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 6 புதியரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மின்சார ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
36 மின்சார ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் - ஆவடிக்கு இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 மின்சார ரயில்களில் புறப்படும் இடம், பகுதி ரத்து இடம்பெற்றுள்ளன.
ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு அதிகாலை 3 மணி, ஆவடி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.20, ஆவடி - மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மாலை 4.20, இரவு 7.15, சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு காலை 6.10, சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 10.35 மணி ஆகிய நேரங்களில் புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago