மருந்து ஆய்வாளர் பதவிக்கு ஏப்.24-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மருந்து ஆய்வாளர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இணையத்தில் வெளியீடு: இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான அழைப்பாணை கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

மறுவாய்ப்பு இல்லை: தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி ஒதுக்கீடுவழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே பணி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்