சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 708 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள3,726 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,842 விவிபாட் இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 685 பதற்றமான, 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 708 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுண் பார்வையாளர்கள் மூலமும் இந்த வாக்குச்சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், அனைத்து பதற்றமான வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago