காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும் காரைக்காலில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதி நீர் காரைக்கால் பகுதியில் மீண்டும் கரைபுரண்டு ஓட, உச்ச நீதிமன்றம் ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கட்சியின் நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
காரைக்கால் கோவில் பத்து புதிய பஸ் நிலையம் அருகே ரயிலடியில் நாளை (ஏப். 18) காலை 9 மணி தொடங்கி மாலை 6 வரை உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது. உண்ணாவிரதப் போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னார் வாரியத்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக் கோரி எப்போதும் விவசாயிகளின் உற்ற தோழனாக என்.ஆர்.காங்கிரஸ் இருந்து வருகிறது. கட்சியுடன், காரைக்கால் விவசாயிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்'' என்று பாலன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago