பட்டியலின மக்களை திமுக வாக்கு வங்கியாக பார்க்கிறது: அண்ணாமலை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் வலைதள பதிவு:

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் அந்த சம்பவத்தை மக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சிக்கிறது திமுக அரசு.

இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப்புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றிவரும் திமுகவின் சந்தர்ப்பவாதஅரசியலே இதற்கு காரணம்.வேங்கைவயல் மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?

தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள்அறிவித்திருப்பது வருத்தத்துக்குரியது. அவர்கள் மாற்றத்துக்காக வாக்களிக்க முன்வருவதுதான் திமுக அரசுக்கு பதிலடியாக இருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்