பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை? - ப.சிதம்பரம் கேள்வி

By செய்திப்பிரிவு

காரைக்குடி: பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 4 மாதங்களாகத் தயாரிக்கப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கையை 14 நாட்களில் தயாரித்துள்ளனர். இந்த 14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக கூறுகின்றனர். இதற்காககின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர்களுக்கு இடம்தர வேண்டும்.

பாஜக தேர்தல் அறிக்கையில் புதியபாதை, புதிய அறிவிப்புகள் இல்லை.5 கோடி பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக இருந்தால் 80 கோடி பேருக்கு ஏன் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் அரிசி, கோதுமை தர வேண்டும்?

சாதிவாரி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையைக் கண்டறிய முடியும். 4 கோடி இலவச வீடுகள் கட்டியதாகவும், 3 கோடி வீடுகள் கட்டப் போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஒருமாவட்டத்துக்கு சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும்.

ஒரு புல்லட் ரயில் இயக்கவேரூ.1.10 லட்சம் கோடி செலவானது. இதனால் புதிதாக அறிவித்த புல்லட்ரயில் திட்டத்துக்கு பணம் உள்ளதா, கடன் வாங்க போகிறார்களா? பணமதிப்பிழப்பாலும், கரோனா காலத்திலும் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. ஆனால், அவர்களுக்கு கடன் தருவதாக அறிவித்ததில் வட்டி, கடன் அளவை கூறவில்லை.

கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது என பாஜக கூறுகிறது.ஆனால்கடந்த 9 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் ரூ.10 லட்சத்து 41 யிரத்து 974 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நாடு; ஒரு தேர்தல்,பொது சிவில் சட்டம் இவை பேராபத்துகள். மக்களை பிளவுபடுத்தி, சர்வாதிகார பாதைக்கு அழைத்துசெல்லும்.

கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல்எல்லோரும் பேசினார்கள். ஆனால்,தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?

10 ஆண்டாக அரைத்த மாவையேதேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். அதைமக்கள் நிராகரிப்பார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்