கோவையில் திமுக கவுன்சிலர் வீட்டில் வருமான வரி சோதனை

By இல.ராஜகோபால்

கோவை: கோவையில் திமுக கவுன்சிலர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் மற்றும் மத்திய மண்டல தலைவராக பணியாற்றி வருபவர் மீனா லோகு. சிவானந்தா காலனி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று மூன்று கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சோதனை குறித்து விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்தவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE