ஒரே பகுதியில் இந்திய கம்யூ. - நாம் தமிழர் கட்சியினர் போட்டி போட்டு முழக்கம் - நாகையில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகையில் நேற்று ஒரே பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே பிரச்சினை நேரிட இருந்ததால் பரபரப்பு நேரிட்டது.

நாகை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வ ராஜ், நேற்று நாகை நகரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். டாடா நகரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டிருந்தார். அதே வேளையில், நீலா கீழ வீதியில் உள்ள அபிராமி அம்மன் சந்நிதி திடலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து திறந்த வேனில் இருந்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். இதனால், இண்டியா கூட்டணியினரை அருகில் உள்ள சந்நிதி தெரு வழியாகச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், இண்டியா கூட்டணியினரோ, நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கிய நீலா கீழ வீதி வழியாகத்தான் செல்வோம் எனக் கூறினர்.

மேலும், நாம் தமிழர் கட்சியினர் நின்றிருந்த பகுதி வழியாகச் சென்ற போது, தங்கள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு முழக்க மிட்டனர். நாம் தமிழர் கட்சியினரும் பதிலுக்கு தங்கள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி முழக்க மிட்டனர். ஒரு கட்டத்தில் இண்டியா கூட்டணியினர் சென்ற வாகனங்களை முன்னேறவிடாமல் நாம் தமிழர் கட்சியினர் தடுத்தனர்.

இதைக் கண்ட திமுக நகரச் செயலாளர் மாரி முத்து, கவுன்சிலர் அண்ணா துரை, காங்கிரஸ் கவுன்சிலர் முகம்மது நத்தர் ஆகியோர், நாம் தமிழர் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மோதல் சூழல் ஏற்படுவதைக் கண்டு, 2 கட்சியினரையும் சமாதானம் செய்தனர். ஆனால், 2 கட்சிகளின் தொண்டர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர்.

இது குறித்து அறிந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இண்டியா கூட்டணியினருக்கு வழி விடுமாறு தனது கட்சியினருக்கு கையால் சைகை செய்தார். இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் விலகினர். இண்டியா கூட்டணியினர் அங்கிருந்து கடந்து சென்று பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்