யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள சூளகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா (71). விவசாயி. இவர் நேற்று முன்தினம் உளிபெண்டா வனப்பகுதி அருகேயுள்ள தனது விளை நிலத்துக்குச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நேற்று காலை விளை நிலத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு யானை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஜவளகிரி வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத் துறையினர், நாராயணப்பாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக தளி போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜவளகிரி வனச்சரகர் கூறும்போது, ‘‘கிராம மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். யானை தாக்கியதில் உயிரி ழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக வனத் துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்