“பாஜக தேர்தல் அறிக்கை தீயநோக்கம் கொண்டது” - முத்தரசன் விமர்சனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: “பாஜக தேர்தல் அறிக்கை ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரும் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. அது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும். மனிதர்களை பிளவு படுத்தும், மதச் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் போன்றோர் மீது வன்தாக்குதல் நடத்தும் தீய நோக்கம் கொண்டது”, என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தேர்தல் அறிக்கை 2024 ‘உறுதி அறிக்கை (சங்லாப் பத்ரா)’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மக்கள் கண்கட்டி ஏமாற்றும் வித்தை விளையாட்டாக அமைந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ள மோடி, அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப் படுத்தி, சிதைத்து விட்டு, தற்போது தனி மனிதனாக நின்று ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பேசும் பேராபத்தை தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பாஜகவும், மோடியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேலையின்மை பெருகியுள்ளது. விலைவாசி அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்கள் நசிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. வறுமை நிலை, கொடிய பட்டினி நிலை வாழ்க்கையாக மாறியுள்ளது. 2014, மற்றும் 2019 ஆண்டுகளில் கூறிய உறுதிமொழிகள் ஆண்டுக்கு 2 கோடி வேலை, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, கருப்புப் பணத்தை மீட்டு குடிமக்களுக்கு வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் கைவிடப்பட்டதை போல், ஏழை மக்களும் அடித்தட்டு மக்களும் கைவிடப்பட்டுள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கை ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரும் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. அது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும். மனிதர்களை பிளவு படுத்தும், மதச் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் போன்றோர் மீது வன்தாக்குதல் நடத்தும் தீய நோக்கம் கொண்டது.

பாஜக தேர்தல் அறிக்கை தொழிலாளர் வேலை உரிமைகள், பெண்களின் வேலைவாய்ப்பு வீழ்ச்சி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்ற உணர்ச்சிகளை தூண்டும் பிரச்சனைகளில் தீவிரம் காட்டுகிறது. விவசாயிகள் விளைவிக்கும் பயிர்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதர விலையும், கடன் நிவாரணமும் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் வாழ்க்கை பிரச்சினைகளையும், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான திட்டம் எதுவும் இல்லாத பாஜக தேர்தல் அறிக்கை அடுக்கி வைக்கப்பட்ட தகர டப்பாக்கள் சரிந்து விழும் போது எழுகின்ற காதை செவிடாக்கும் வெற்று சப்தம் தவிர ஒற்றுமில்லை என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்