நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

By எல்.மோகன்

நாகர்கோவில்/நெல்லை: மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் தக்கலை வந்தார். பகல் 12 மணியளவில் தக்கலை சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு `ரோடு ஷோ'வில் பங்கேற்று, பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அமித்ஷாவை வரவேற்றனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளைத் தாண்டி சாலையின் நடுவே அனைவரும் திரண்டனர். அமித் ஷாவின் வாகனம் நகரமுடியாத அளவுக்கு கூட்டம் ஸ்தம்பித்தது. கேரள மாநிலத்தின் பாரம்பரிய கதகளி நடனக் கலைஞர்கள் சிலர் நடனமாடியபடி ஊர்வலத்தில் முன்னே சென்றனர்.

வாகனத்தில் நின்றவாறு சாலையில் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து அமித்ஷா உற்சாகமாகக் கையசைத்தும், இருபுறமும் பூக்களைத் தூவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுமார் 25 நிமிடம் நடந்த ரோடு ஷோ மேட்டுக்கடை சந்திப்பில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:

கன்னியாகுமரி மக்களுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளீர்கள். இந்ததேர்தலில், இண்டியா கூட்டணியினர் நாடு முழுவதும் பிரதமர் மோடியை பலவிதமாக விமர்சனம் செய்து பேசுகிறார்கள். இதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் அவர்கள் செயல்படுகின்றனர்.

சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதையும் திமுகவினர் கேவலமாகவும், அலட்சியமாகவும் பேசி, கோடிக்கணக்கான மக்களைகாயப்படுத்தினார்கள். அப்படியிருந்தும் நாம் அனைவரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு, நாட்டின் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பிரதமர் மோடி இந்தியாவைபாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச் செல்கிறார். அவர் நிச்சயம் 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்பார். பொன்.ராதாகிருஷ்ணனையும் சேர்த்து பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

நிகழ்ச்சியில், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, மாநில பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் அமித் ஷா நாகர்கோவிலில் இருந்துஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி அம்பையில் நாளை பிரச்சாரம்: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், கடந்த பிப்ரவரி 28-ல் தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு விழாவிலும், பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், குமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நாளை (ஏப். 15) மாலை 4.15 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்