புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித் துறையினர் இன்று (சனிக்கிழமை) மதியம் தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தற்போது அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இளங்கோ நகரில் உள்ள அவரது சகோதரி வீடு மற்றும் நெருங்கிய உறவினர் வீடுகளில் வருமான வரித் துறையினர் இன்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட வருமான வரித் துறை குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் இதே குழுவினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சோதனையின் நிறைவில்தான் விவரங்களைத் தெரிவிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில், தேர்தல் துறை நடவடிக்கை எடுத்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தச் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago