சென்னை: மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்,10 ஆண்டுகால பாஜக ஆட்சிபடுதோல்வி அடைந்துவிட்டதாக வும், பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற ‘லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்’ ஆய்வு அமைப்பு, இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
கருத்துக்கணிப்பு தகவல்கள்: அதில், 27 சதவீதம்பேர் வேலையில்லா பிரச்சினைதான் முக்கிய பிரச்சினை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும்,55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுபாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜகஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது தெரிகிறது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர். ‘சிலரை சிலகாலம் ஏமாற்றலாம்; எல்லோரை யும் எப்போதும் ஏமாற்ற முடி யாது!’
» இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 30 லட்சம் காலி பணியிடம் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி @ கோவை
» ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago