தென்மாவட்டங்களில் மாநில உளவுத்துறையினர் சொல்லும் தகவல்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் புறக்கணிப்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கியத் தொகுதிகளுக்கு சத்தமில்லாமல் மர்ம வாகனங்கள் வந்து செல்வதாக ‘திடுக்கிடும்’ தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளி லும் மக்களவைத் தேர்தல் பணி களைக் கண்காணிக்க தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் (ஆட்சியர்), தேர்தல் பார்வையாள ராக வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதி காரி மத்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் மீறல், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி யினர் பணம் பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் முறையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார், வீடியோகிராபர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக மத்திய, மாநில அரசு உளவுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினரின் விதிமுறை மீறல், பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா குறித்து தேர்தல் அதி காரிகளுக்குத் தகவல் தெரிவிப் பார்கள். அவர்கள் தரும் தகவல் களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து நட வடிக்கை எடுப்பர். இந்நிலையில் மாநில உளவுத்துறை போலீஸார் தெரிவிக்கும் ரகசியத் தகவல் களை தேர்தல் ஆணைய அதிகாரி கள் பொருட்படுத்தாமல் புறக் கணிப்பதாகவும், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் கூறும் தகவல் கள் அடிப்படையிலேயே செயல் படுவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய காங். வேட்பாளர்களின் தொகுதிகளில் மர்ம வாகனங்கள் மத்திய உளவுத்துறை அதிகாரி கள் கூறும் திசைதிருப்பும் தகவல் களால், தேனி, விருதுநகர், சிவ கங்கை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சோதனைச் செய்யப் படாமல் உள்ளதாம். இதனால், குறிப்பிட்ட அந்த தொகுதிகளுக்கு சில மர்ம வாகனங்கள் அடிக்கடி செல்வதாகக் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்,கேரள மாநிலத் துக்கு சில மர்ம வாகனங்கள் சென்றுள்ளன.
மாநில உளவுத்துறை போலீ ஸார் தகவல் கொடுத்தும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago