“அண்ணன் வென்றால்தான் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்” - சண்முகபாண்டியன் உருக்கம்

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: அண்ணன் விஜயபிரபாகரனை வெற்றிபெறச் செய்தால்தான் தந்தை விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும், என அவரது தம்பி சண்முகபாண்டியன் உருக்க மாகப் பேசினார். விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவரது தம்பியும், நடிகருமான சண்முகபாண்டியன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

இவர் அருப்புக்கோட்டை பாவாடி தோப்பு, காந்தி மைதானம், மதுரை ரோடு சிவன் கோயில், புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, எம்.எஸ்.கார்னர், நேரு மைதானம், அண்ணா திடல் மற்றும் ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது அண்ணனுக்காக நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனது தந்தை சாயலில் உள்ள எனது அண்ணனை வெற்றி பெறச் செய்தால்தான், எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையும். உங்களது அனைத்து பிரச்சினைகளையும் இந்த தொகுதியில் இருந்தே எனது அண்ணன் கேட்டு சரிசெய்வார்.

உங்களது தம்பியாக, உங்களது அண்ணனாக, உங்களது மகனாக விஜயபிரபாகரன் இந்த தேர்தலில் நிற்கிறார். எனவே, 4-வது பட்டனை அழுத்தி முரசு சின்னத்துக்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உருக்கமாகப் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்