‘ஸ்கேன் பண்ணுங்க... ஸ்கேம் பாருங்க’ - மோடிக்கு எதிராக நூதன பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

‘ஸ்கேன் பண்ணுங்க; ஸ்கேம் பாருங்க’ என்ற பெயரில், பிரதமர் மோடி படத்துடன் கூடிய ‘க்யூ ஆர் கோடு’ போஸ்டர்கள் மூலம், நூதன முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பிரதமர் மோடியின் உருவத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. க்யூ ஆர் கோடு வடிவத்தில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதன் மேல் ‘ ஜி பே’ என்றும், கீழ் பகுதியில் ஸ்கேன் பண்ணுங்க; ஸ்கேம் பாருங்க என எழுதப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் உள்ள பிரதமர் மோடியின் உருவத்தை மொபைல்போனில் ஸ்கேன் செய்தால், கருப்பு பணத்தை வசூலிப்போம் என்று கூறியது, தேர்தல் பத்திர விவகாரம், பாரத்மாலா திட்ட சாலை பணிகளில் கூடுதல் தொகை செலவழித்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஒருவர் பேசுவதுபோல் குரல் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை ஆண்கள், பெண்கள் என பலரும் ஸ்கேன் செய்து, விவரங்களை கேட்டு வருகின்றனர். இந்த போஸ்டர்கள் யாரால் ஒட்டப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் இல்லை. ஆனால், ஒட்டப்படும் போஸ்டர்களில் அச்சகம், வெளியீட்டாளர்கள் விவரம் கட்டாயம் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக அனுமதி பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE