நீலகிரி தேர்தல் அதிகாரி மீதான புகார் குறித்து அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை: சத்யபிரத சாஹூ தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீதான புகார் குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றதும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி தொடர்ந்து தன்னை துன்புறுத்துகிறார் என்றும், செலவின பதிவுகளால் திமுக வேட்பாளருக்கு ஏதேனும் பாதகம் நடந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்றும் உதவி தேர்தல் செலவின பார்வையாளர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகிடைக்கப் பெற்ற பிறகு, இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE