ராஜபாளையம்: திமுக, அதிமுகவை அண்ணா மலை இணைத்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் பாஜக கிளை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: திமுக அதிகார பலத்தையும் பணப் பலத்தையும் நம்பி தேர்தலை சந்திக்கிறது. திமுகவிடம் லாட்டரி, போதைப்பொருள், மது, கனிமவள கொள்ளை பணம் குவிந்து கிடக்கிறது. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உருவான கால கட்டத்தில் மீண்டும் அந்த இரு கட்சிகளையும் இணைக்க ஒடிசாவிலிருந்து வந்த அரசியல் தலைவர் பிஜு பட்நாயக் முயற்சித்தார்.
அந்த முயற்சி கைகூடவில்லை. ஆனால், இன்று அண்ணாமலை திமுக, அதிமு கவை ஒன்று சேர்த்து விட்டார். பாஜக உள்ளே வந்து விடக் கூடாது என்ற கொள்கையில் அதிமுக, திமுக ஒன்றாகி விட்டன. தமிழகத்தில் சாதி பிரச்சினையை தூண்டிவிட்டு திராவிட கட்சிகள் குளிர் காய்ந்து கொண்டிருந்தன. பாஜக கூட்டணி சாதி மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தென்காசி தொகுதி நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக உள்ளது. இப்பகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. இவ்வாறு அவர் பேசி னார்.
வேட்பாளர் ஜான்பாண்டியன் பேசுகையில்: நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வருவதற்கு தென்காசியில் தாமரை மலர வேண்டும். இந்த தேர்தலுக்காக மட்டுமல்ல, நிரந்தரமாக தென்காசி தொகுதி தாமரையின் பக்கம் மாறுவதற்கு பணியாற்ற வேண்டும். 2026-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். அதற் கான உழைப்பை இன்றே கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பாஜக மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா, தென்காசி தொகுதி இணை அமைப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago