“ஒரு தலைமுறைக்கே கல்வியை இல்லாமல் செய்ய பாஜக முயற்சி” - கனிமொழி பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய கனிமொழி அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக புதிய கல்வி கொள்கைமூலம் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை சிதைக்க நினைக்கிறது. ஒரு மாணவர் இருந்தாலும் அந்த மாணவனுக்காக பள்ளியை நடத்தும் மண் தான் தமிழகம். ஆனால் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடிவிட்டு அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்துக்கு கொண்டு வந்து படிக்க வைக்க வேண்டும் என பாஜகவின் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.

பாடம் புகட்ட வேண்டும்: அதுபோல பிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வை கொண்டுவர நினைக்கிறார்கள். இதன் மூலம் ஒரு தலைமுறைக்கே கல்வியை இல்லாமல் செய்ய முயலுகிறார்கள். மக்கள் எந்த உரிமைகளும் இல்லாதவர்களாக, அடிமைகளாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்க நினைக்கிறார்கள்.அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட பிரதமர் மோடி நிவாரண உதவி வழங்கவில்லை. தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தனை உதவிகளையும் வழங்கியுள்ளது.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும் போது 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். ஊதியம் ரூ.400 வழங்கப்படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும். விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும். எனவே, மக்கள் தூத்துக்குடி தொகுதியில் எனக்கு ஆதரவு தரவேண்டும் என்றார் தொடர்ந்து மேலத்தட்டப்பாறை, பேரூரணி, புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல், தெய்வ செயல்புரம், வல்லநாடு, ஆகிய பகுதிகளில் கனிமொழி பிரசாரம் செய்தார். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா மற்றும்கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்