விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு: நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தாக்க முயன்றதாகவும் அரசியல்காரணங்களுக்காக என் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது இதுவரை 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்தம் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் பணிகளை செய்ய விடாமல் தடுத்து, அரசு அதிகாரிகளை தாக்கவும் முற்பட்டுள்ளார். எனவேஅவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது, என கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில், பணிகள் சரியாகநடைபெறவில்லை என்பதால் கேள்வி எழுப்பினேன். இந்த வழக்கு தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பதியப்பட்டுள்ளது என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, கடந்த 2022-ம் ஆண்டும் மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும் எனக்கேள்வி எழுப்பி, முன்ஜாமீன் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் கடந்த 2022 முதல் மனுதாரர் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்