காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சாலை மறியல், ரயில் மறியல் செய்யமாட்டோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைக்க விருப்பமில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று நடக்கவிருக்கும் ‘மக்கள் நீதி மய்யம்’ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன், நேற்று மதியம் சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மக்களுடன் பயணம் செய்தார்.
கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் மவுரியா, எழுத்தாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், பா.ராஜ நாராயணன், சுகா, ரங்கராஜன் ஐஏஎஸ், வழக்கறிஞர் ராஜசேகர், கமீலா நாசர், ஸ்ரீப்ரியா, வழக்கறிஞர் அருணாச்சலம், மூர்த்தி உட்பட 42 பேர் கொண்ட குழுவினரும் அவருடன் சென்றனர்.
ஆரம்பத்தில் கமல்ஹாசன் குழுவினருக்காக ஒரு தனி கோச் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே சிலர் அந்தக் கோச்சில் முன்பதிவு செய்திருந்ததால் தனி கோச் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், “மக்களோடு மக்களாக பயணம் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதைத்தான் நான் விரும்புகிறேன். தவிர, மக்களோடு நான் பயணம் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே அடிக்கடி கொடை ரோடு வரையில் இதே ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு மக்களுடன் கலந்து ரகசியமாகப் பயணித்தேன்” என்றார்.
ரயில் விழுப்புரத்தை நெருங்கிய நிலையில் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராக அவரைச் சந்தித்து பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் பற்றியே அவர் அதிகம் பேசினார். இதுகுறித்து ‘தி இந்து’-விடம் பேசிய அவர், “சிலர் சாலையை மறிக்கிறார்கள், ரயிலை மறிக்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி செய்ய முடியாது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதேசமயம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படும் வகையில் எங்கள் போராட்டம் அமையும். நாங்கள் நேரடியாக பிரதமரை சந்திப்போம். தொடர்ந்து அழுத்தம் தருவோம்” என்றார்.
கமல்ஹாசனின் ரயில் பயணத்தை அறிந்த ரசிகர்களும் பொதுமக்களும் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் உள்ளிட்ட ரயில் நிறுத்தங்களில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பிளாட்பாரத்தில் குவிந்திருந்தவர்களுடன் கைகுலுக்கியும் ஆட்டோகிராஃப் இட்டும் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். ரயிலில் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவர்களையும் சந்தித்தார்.
மதுரை மகாத்மா பள்ளியைச் சேர்ந்த செய்நம்பு என்ற ஆசிரியை, “நாட்டில் இருக்கும் அனைத்து நதிகளையும் எப்போது இணைக்கப் போகிறார்கள். அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “எனக்குள்ளேயும் அதுதொடர்பான அக்கறை இருக்கிறது. பொறுப்புக்கு என்னை அமர வையுங்கள். நான் செய்கிறேன்” என்றார். தொடர்ந்து அந்தப் பள்ளியின் மாணவிகளை அழைத்து அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டார். திருச்சி ரயில் நிலையத்தில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு
முன்னதாக நேற்று மதியம் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கமல் வந்தபோது, அவரைப் பார்க்க தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். கமல்ஹாசனை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றினர். அப்போது அவரைப் பார்க்க பலர் முண்டியடித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago