கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியதன் அறிகுறியாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மே கடைசி வாரத்தில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மலைக்கிராம விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்தது. தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து தழுவிச்செல்வது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வழக்கமாக மே மாதத்தில்தான் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் ஏப்ரலிலேயே அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் கோடை விழாவின் தொடக்கமாக மலர்க் கண்காட்சி 2 நாள் நடக்கும். இதற்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது. 10 நாள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் விதமாக வாத்து பிடிக்கும் போட்டி, படகுப்போட்டி, நாய்கள் கண்காட்சி, விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சியை மே இறுதிவாரத்தில் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago