“ஈடு செய்யமுடியாத பேரிழப்பு” - ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் மறைவையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆர்.எம்.வீரப்பன் பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதிஎன அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். கருணாநிதியுடன் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும்விரும்பப்படும் பேராளுமையாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எம்ஜிஆர் அதிமுகவைதொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பன்முகத் தன்மை கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

திக தலைவர் கி.வீரமணி: அரசியலில் ஒரு தனி இடத்தைப் பெற்ற எம்.ஆர்.வீரப்பனின் மறைவு திராவிடர் இயக்கத்துக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: திராவிட இயக்கம் வளர தொண்டாற்றிய ஆர்.எம்.வீரப்பனின் இழப்பு திராவிட இயக்கத்துக்கு பேரிழப்பாகும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரசியல், திரைத்துறையில் முத்திரை பதித்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அதிமுக கட்சி உருவாவதற்கு முக்கிய பங்காற்றியவர். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆர்.எம்.வீரப்பனின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்டஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நடிகர் ரஜினிகாந்த்: ஆர்.எம்.வீரப்பன், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் அவருக்குமான நட்பு மிக ஆழமானது.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் பாரதிராஜா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்