புதிய உச்சம்: தினசரி மின்தேவை 20,125 மெகாவாட்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. குளிர்காலத்தில் மின் பயன்பாடு குறைவதால், இது 9 ஆயிரம் மெகாவாட் என குறையும். கோடை காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் என உயரும்.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பயன்பாடு அதிகரிப்பதால், தினசரி மின்தேவையும் உயர்ந்துள்ளது. தினசரி மின்தேவை கடந்த மார்ச் 30-ம் தேதிஅதுவரை இல்லாத அளவாக19,387 மெகாவாட்டாக அதிகரித்தது. தொடர்ந்து, ஏப்ரல் 3-ம் தேதி 19,413 மெகாவாட், 4-ம் தேதி 19,455மெகாவாட், 5-ம் தேதி 19,580 மெகாவாட் என அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) தமிழகத்தின் மின்தேவை 20,125 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழகத்தின் தினசரி மின்தேவை ஏப்ரல் 8-ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரை உச்சபட்ச தேவையாக 20,125 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்