“மோடி எனும் மனிதரை தோற்கடிக்க முடியாது” - நடிகை நமீதா பிரச்சாரம் @ திருப்பூர்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் பாஜகவுக்கு ஆதரவு கோரி நடிகை நமீதா நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது, மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும், நாடு முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமின்றி குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை திமுக கேட்டுள்ளதா? ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார்.

மக்களை பிரித்தாளும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு, சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ, அதுபோல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளன. இருப்பினும், அவர்களால் மோடி எனும் மனிதரை தோற்கடிக்க முடியாது. விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக் கிறோம். பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று, கச்சத் தீவு விவகாரத்தில் நல்ல நடவடிக்கையை மேற்கொள்வார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்