“பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால்...” - சீமான் சவால்

By செய்திப்பிரிவு

அந்தியூர்: "பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால், நாங்கள் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்" என்று பிரதமர் மோடிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசியவர், "பத்தாண்டு கால ஆட்சியில் தங்களது ஒரு சாதனையை பாஜக சொல்ல சொல்லுங்கள், நாங்கள் இப்போதே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம். ஒரு நல்லது அவர்களால் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் சொல்ல முடியுமா.

பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு இனிமேல் புதிய இந்தியாவை உருவாக்க வாய்ப்பு வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. பத்தாண்டுகள் காங்கிரஸ், பத்தாண்டுகள் பாஜக என என் வாழ்நாளில் பாதி கழிந்துவிட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி முடிந்தபிறகு வந்த மோடி இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். சொன்னபடி கொடுத்தாரா இல்லையே.

15 லட்சம் தருவதாக சொன்னார். அதை அப்படியே மக்கள் நம்பிவிட்டனர். பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பிஎம்கேர்ஸ்க்கு எதிராக கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை.

எல்லோருக்கும் அவரவர்கள் சின்னத்தை கொடுக்கும்போது எனக்கு மட்டும் விவசாயி சின்னத்தை பறித்தார்கள். ஏனென்றால் பயம் தான் காரணம். நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று சீமான் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்