மக்களைத் தேடி மருத்துவம்: இணைநோயாளிகளுக்கு பக்கவிளைவு பாதிப்புகளுக்கான பரிசோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள இணை நோயாளிகளுக்கு பக்கவிளைவு பாதிப்புகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 67.30 லட்சம்உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36.50 லட்சம் சர்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 31.3 லட்சம் நோயாளிகள் உள்பட மொத்தம் 1.54 கோடிஇணை நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். அவர்களுக்கு, மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படு கின்றன. இந்நிலையில், ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெறும் இணை நோயாளிகளுக்கு முதல்கட்டமாக, கண் பரிசோதனை, கால் புண்கள், சிறுநீரகபரிசோதனைகள் மேற்கொள்ளப் பட இருக்கிறது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்மூலமாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இணைநோயாளிகளுக்கு, அந்நோய்களின் பக்க விளைவுகளால் வேறு சில பாதிப்புகளும் ஏற்படும். அதனால், முதல்கட்டமாக ஏற்படக்கூடிய கண் பாதிப்பு, கால் புண்கள்,சிறுநீரக பாதிப்புக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் பார்வைத் திறன் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கென சிறப்பு முகாம்கள் அமைத்து வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE