தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது? - சாட்டை துரைமுருகனின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினார் என்ற காரணத்துக்காக ஒருவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றால் எத்தனை பேரை சிறையில்அடைப்பது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நாம்தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தமிழகமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டுகைது செய்யப்பட்டார். இனிமேல்யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரிமாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறியதாகக்கூறி தஞ்சாவூர் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2022 ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா, உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, ஜாமீனில் இருக்கும் சாட்டை துரைமுருகன் அவதூறு கருத்துளை தெரிவிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் அனைவரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால் தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைசிறையில் அடைப்பது என்றும், அவரது கருத்து அவதூறானதா, இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது என்றும், அவர் தனது ஜாமீன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாகக்கூற எந்த ஆதாரமும் இல்லை எனக் கருத்து தெரிவித்து அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்