காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி பொதுப் பார்வையாளராக இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜெகதீஷ் சந்தர் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கான பொதுப் பார்வையாளராக அருணாச்சலபிர தேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஏப்ரல் 5-ம் தேதி காஞ்சிபுரம் வந்து பொறுப் பேற்றுக்கொள்கின்றனர்.
இவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று பார்வையிட உள்ளனர்.
செலவினப் பார்வையாளர்கள் நியமனம்: இரு மக்களவைத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான தேர்தல் செலவினங்களை பார்வை யிடுவதற்காக 4 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கோபிநாத் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் ஆகியவற்றுக்கு பிரசாத்ராவ் செலவினப் பார்வை யாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளுக்கு பவானி சங்கரும், மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு பரத் சந்துலேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago