2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிநவீன சிக்னல் தொழில்நுட்பம் அறிமுகம் : ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கலாம்

By கி.ஜெயப்பிரகாஷ்

2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிநவீன சிக்னல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஒன்றரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடி யும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் முதல் கட்டமாக நடந்துவரும் 45 கி.மீ தூர மெட்ரோ ரயில் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும். இதற்கிடையே, 2-வது கட்டமாக மாதவரம் - மயிலாப்பூர் – சிறுசேரி, மாதவரம் – கோயம்பேடு - பெரும்பாக்கம் – சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம் – கோயம்பேடு - வி.இல்லம் ஆகிய 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 105 கி.மீ தொலைவுக்கு ரூ.85,047 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது மத் திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள், கூறிய தாவது: புதிதாக தொடங்கவுள்ள 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்துக்கான மற்ற ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. ஒப்புதல் கிடைத்த அடுத்த சில வாரங்களிலேயே பணிகளைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளோம். 25 சதவீத செலவை குறைக்கும் வகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். முதல்கட்ட பணியின்போது 50 மீட்டர் இடைவெளியில் நடத்தப்பட்ட மண் பரிசோதனையை இனி 25 மீட்டர் இடைவெளியில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய சிக்கன நடவடிக்கையால், பயணிகளுக்கு அளிக்கும் வசதிகளில் எந்த பாதிப்பும் இருக்காது. 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நவீன சிக்னல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தவுள்ளோம். இதன் செயல்பாடுகள் அதிவிரைவாகவும், துல்லியமாகவும் இருக்கும். தற்போதுள்ள முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிகபட்சமாக இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடியும். ஆனால், இந்த புதிய சிக்னல் தொழில்நுட்பம் மூலம் ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்