தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாட்டாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்த பாஜகவுக்கு தேர்தல் வந்துவிட்டதாலும், சீன எல்லைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாலும் கச்சத்தீவு பிரச்சினை நினைவுக்கு வந்துவிட்டது” என்று சாடியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
“கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அதை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை” என எதிர்க்கட்சிகள் கச்சத்தீவு மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகின்றன.
» ‘ஸ்டார் தொகுதி’ தென்சென்னை கள நிலவரம் சொல்வது என்ன? - ஒரு பார்வை
» ‘வேட்பாளர் காங்கிரஸ் தான். ஆனா...’ - மயிலாடுதுறை தொகுதி ‘சம்பவம்’
இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இந்நிலையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago