பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.95 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியில் வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.95 லட்சத்தை நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நசரத்பேட்டை, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசகன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

அச்சோதனையில், வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ராம்லால், உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாளையம் தலைமையிலான பறக்கும் படையினர், திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரண்வாயல் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணமின்றி 95 ஆயிரத்து 150 ரூபாயை எடுத்துச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 95 ஆயிரத்து 150 ரூபாயை தேர்தல் படையினர் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த தொகை பூந்தமல்லி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்