சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10, 11, 12-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 13-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 இடங்களில் வெயில் சதம்: நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான அளவின்படி ஈரோடு, திருப்பத்தூர், சேலத்தில் 107 டிகிரி, நாமக்கல், வேலூரில் 106, திருத்தணி, திருச்சி, தருமபுரியில் 105, கரூர் பரமத்தி, தஞ்சாவூரில் 104, கோவை, மதுரையில் 103, சென்னையில் 102, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago