மதுரை | 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மலையேறி விழிப்புணர்வு

By எஸ்.ஸ்ரீனிவாசகன்


மதுரை: மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவிகள் இன்று (சனிக்கிழமை) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் ஏறி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நீண்ட வரிசையில் அணிவகுத்து கவனம் ஈர்த்தனர்.

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வரிசையில், மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை, காவல்துறை, செஞ்சிலுவை சங்கத்தினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்