சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.
மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் மாதம் 30-ம் தேதிக்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில்சொத்து வரியில் 5 சதவீதம்,அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரைதள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு ஒரு சதவீதம்தனிவட்டி விதிக்கப்படும் என்றுமாநகராட்சி வருவாய்த் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலுவை சொத்து வரியை வசூலிக்கும் விதமாக மாநகராட்சி சார்பில், நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதோர் பட்டியலை https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
» ஓசூர்: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
» ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு: தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க உத்தரவு
கடந்த கடந்த நிதியாண்டில் ரூ.1700 கோடி சொத்து வரிவசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ1800 கோடி வரி வசூலாகியுள்ளது. இதே போன்று தொழில் வரி ரூ.533 கோடி வசூலாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago