“திமுகவால் முடியுமா என கேட்டோருக்கு தக்க பதில்தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: “நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான திமுகவால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை” என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழகத்தின் உரிமைகளை மீட்க, இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான திமுகவால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. | விரிவாக வாசிக்க > மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE