ஸ்ரீபெரும்புதூர் | மணிக்கூண்டை மறைத்து கட்சி பேனர்

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் திறந்து வைத்த மணிக்கூண்டை மறைத்து அதிமுக கட்சிபேனர் வைத்து இருப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே, கடந்த 1955-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பழமையான மணிக்கூண்டு உள்ளது. இது ஸ்ரீபெரும்புதூரின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் மிக உயரமான பேனர் மணிக்கூண்டை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டது.

பொதுமக்கள் கண்டனம்: இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். முன்னாள் முதல்வரை அவமதிக்கும் வகையில் மணிக்கூண்டை மறைத்து பேனர் வைக்கப்பட்டு உள்ளது, தங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் கட்சியினர் நடவடிக்கைக்கு ஸ்ரீபெரும்புதூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் திறந்து வைத்த மணிக்கூண்டை மறைத்து பேனர் வைத்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE