சென்னை: நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நண்பர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அபிஷேக் (18). அதே பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (19). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை சென்று, மற்றொரு நண்பரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
இரவு 10.30 மணியளவில் போர் நினைவுச் சின்னம் வழியாக ராஜாஜி சாலையில் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் இறங்கும்போது அதே வழியாக வந்த எர்ணாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக உரசினர்.
இதில், அபிஷேக் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியன் எச்சரிக்கை பலகையின் இரும்புத் தடுப்பு வேலி மீது பலமாக மோதியது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். இதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பூக்கடை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் நிகழ்விடம் விரைந்து இருவரையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் அபிஷேக், விவேக் இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக அபிஷேக் சென்ற இருசக்கர வாகனம் உரசியதில் ரமேஷும் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago