பாமகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு

By செ.ஞானபிரகாஷ்

 

பாமக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11-ம் தேதி அன்று பாமக சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியும் ஆதரவு அளித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயப் பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மெத்தனப்போக்கோடு மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பாஜக அரசைக் கண்டித்து பாமக 11-ம் தேதி நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்