சென்னை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் - மைசூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் உட்பட சில வழித்தடங்களில் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகள் வரவேற்பை பொருத்து, இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயிலின் 4 சேவை (ஏப்.4 முதல் ஏப்.25-ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயிலின் 4 சேவை (ஏப்.4 முதல் ஏப்.25 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் 8 சேவை (ஏப்.7 முதல் மே 27) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago